26 May 2014

வரலாறில் வருவேனோ

இனம்பாராமல் தொட்டுசெல்லும்
காற்றை
ஏற்றுவாழும் சிலர்,
இனம்பாராமல் இதயம்தொட்டுசெல்லும் காதலை மட்டும் ஏன் எதிர்த்துவாழ்கிறார்களோ? வேளி தாண்டி
நுழைந்து கொண்டுதான் இருக்கிறது
உண்மையான காதல்...


******

நேசிக்க ஆரம்பித்துவிட்டால் எதிரியும்
தோழனாக
தோன்றுவான்...
அதைபோலவே
வெருப்பைகொட்டும் வாழ்க்கையையும் விரும்பிபார் வசந்தமழைதான் வாழ்நாள்முழுவதும்...
மனதின் எண்ணங்களே வாழ்வின் வண்ணங்கள்...
 
*******
 
பெண்ணே! உன் கண்ணில் அழகாய் தெரிந்ததற்காக,
உடலை துண்டாக்கி
உயிரை பறித்து சூடிரசித்தவள் நீ வாசம்வற்றிபோகவும் வீசிஎறிந்தாயடி வீதியில் என்னை...
இப்படிக்கு,
ரோஜா.
இதைபோல தான் பெண்ணே!
உன் உள்ளம்கவரும் ராஜாவின் வாழ்க்கையும் உதிருமோ?
 
*******
 
பாவையே!
மோதல் நடத்திய மூச்சுகாற்றால் இதயம் பஞ்சாக பறப்பதும்,
தாக்குதல் நடத்திய பார்வையால்
பாறைபோல் இதயம் நகராதிருப்பதும்
காதலல்ல...
நினைவின் மோதலால் நெஞ்சம் அவளோடு மிதப்பதும்,
தனிமையின் தாக்குதலால் நெஞ்சம் அவளால் உடைவதுமே காதல்...
 
********
 
கல்வியின் வாசனை அறியாதவனும்,
காதலின் வாசனையால் கவர்ந்திழுக்கபடுவான் கவிதைகள்எழுத...
 
*******
 
காலைவானில் காணமால்போகாமலிருக்க ஆகாயநிலவிற்கு
ஆக்ஸிஜன் அனுப்பி உயிர்அளித்தேன்...
உயிர்பூத்த நிலவாலும் உள்ளத்தில்பூத்த உன்னாலும்
அகிலமும் அகமும் அழகானதடி...
இரத்தநாளங்களில்
கவிதைகளாய் வழிந்து நரம்பில் நடனமாடி இறுதியில் இதயம் சேர்ந்தாயடி...
தூங்கா துடிப்பாகி உன்ஆழ்மனதுள் ஆயுள்கரைப்பேனடி...
விழிகளை விடியல்உரசும்வரை உணரவில்லை
கண்ணோடு
வாழ்ந்தது கனவென...
கனவுகலைந்த பிறகு புரிந்தது வாழ்ந்தது பெண்ணே!
உன் நினைவென...

*******

ஊஞ்சலாடும் பார்வைகள் ஏனோ உனைகண்டதும் ஊனமானதோ...
கதை பேசும் விழிகள் ஏனோ உனைகண்டதும் கவிதைபேசுதோ...
ஊமை விழிகள்
ஏனோ உனைகண்டதும்
உரையாடுகிறதோ...

இரவின் இருளில் உறங்கிய இருவிழிகள் ஏனோ
உனைகண்டதும் உறக்கத்தை தொலைத்ததோ...
உருவம் வாங்கி உயிர்வாழ்ந்த விழி ஏனோ
உனைவாங்கியதும்
உறைந்துபோனதோ...

********

உன்னை எழுத தமிழிடம் வார்த்தைகள் இல்லை...
உன்னை அறிவியலால் ஆராயமுடியவில்லை...
இவைகளால் இயலாததை
நான் இயக்கிபார்க்கிறேன் உன்னால்
வரலாறில் வருவேனோ...

**********
 
 
  

 

கண்ணீரை செலவிட்டு

மின்சார உணவால் இயங்கும் இயந்திரமனிதன் போல,
மின்சாரபெண்ணே!
உன்நினைவின் உணவால்
இயங்குகிறது
எந்தன் இதயமடி...

*******

"பிரிவென்பது"-
உறவைமுறிக்க
உருவான ஆயுதமாகிறது உன்பார்வையில்...
உன்னை அதிகமாய் நேசிக்கவைத்திடும் காரணியாகிறது என்பார்வையில்...

*******

உன்மீதுள்ள அதிகஅன்பை உறவை சேமிக்கும்
"இதயம்"
உணர்ந்ததைவிட, கண்ணீரை செலவிட்டு
"இருவிழிகள்"
உணர்ந்த தருணமே அதிகம்......

********

உயிர்கள்
வாழாமல்போனால்
உள்ளமும் பாலைவனமாகிவிடும்...

*******

பெண்ணே!
உன்னை கண்டதும்
உடல்உள்ளேஉறங்கிய ஹார்மோன்களும் கவிதைகளை சுரக்க ஆரம்பித்துவிட்டன என்னில்...

********

கோபத்திற்கு உதாரணம் தந்துவிடும் அவளது ஊசிப்பார்வை...
கண்ணீருக்கு உதாரணம் தந்துவிடும் அவளது ஈரப்பார்வை...
இவைகளை போலவே
காதலிற்கு உதாரணம் தந்துபோகும் அவளது ஓரப்பார்வை...

********

கவர்ந்திழுப்பது காந்தத்தின்குணமென
"அறிவியலாள்" அன்று அறிந்தேன்...
கருவிழிகளின்குணமும் அதுவென்றே
"அவளால்" இன்று  புரிந்தேன்...

********

பிரிவை சந்திக்காதவரை
வலிகளின் பொருள்புரியவில்லை பெண்ணே!
நீ வசிக்கும் என்
நெஞ்சத்திற்கு..

********